பூவே உனக்காக, உங்கள் சன் டிவி யில் வரும் ஜூலை 10 முதல்.....

பூவே உனக்காக, உங்கள் சன் டிவி யில் வரும் ஜூலை 10 முதல்.....
#suntv #pooveunakaaga #tamilserials


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்பருத்தி என்ற சீரியல் மிக பிரபலமானது. அதன் தயாரிப்பாலர் தற்போது சன் தொலைக்காட்சிக்காக பூவே உனக்காக என்ற சீரியல் தயாரித்துள்ளார். இரு தோழிகளுக்கான கதை தான் இந்த பூவே உனக்காக. காரோண காரணத்தால் 4 சீரியல்கள் நிறுத்த பட்ட நிலையில் ரோஜா மற்றும் நாயகி சன் டிவி ல இரவு ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. நாயகி 30 நிமிடம் மாற்றப்பட்டு அந்த நேரத்தில் சித்தி 2 வர இருக்கின்றது. ரோஜா 30 நிமிடம் மாற்றப்பட்டு பூவே உனக்காக ஒளிபரப்பப்படும்.



கடந்த ஒரு வருடமாக குஷி என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வந்த இந்த சீரியல் கதைக்களம், நடிகர்கள் என நிறைய குழப்பங்களை சந்தித்து வந்தது. ஒரு வருட போராட்டத்திற்கு பிறகு ஜூலை 10 முதல் உங்கள் சன் டிவி யில் "பூவே உனக்காக" ஒளிபரப்புக்கு வர இருக்கின்றது. இதே போல் மத்திய நேரத்தில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த "நிலா", "அக்னி நட்சத்திரம்" இரு சீரியல்களின் நேரம் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் ஜூலை 10 இந்த இரண்டு சீரியல்களும் ஒளிபரப்புக்கு வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எது  எப்படியோ காரோண காலத்தில்  வீட்டில் சமையல் செய்து அலுத்துப்போன பெண்களுக்கு இந்த சீரியல்கள் பெரும் ஆறுதலாக இருக்கும்.

No comments:

Post a Comment