கோழி குஞ்சும்...கழுகு குஞ்சும்

 

Best #Motivational Stories in Tamil

ஒரு விவசாயி தன வீட்டுல பெட்டை கோழி வளர்த்து வந்தார். ஒரு நாள் அவர் காட்டுக்குள்ள நடந்து போனப்ப அங்க ஒரு கழுகு முட்டை கீழே
இருக்கிறத பாத்து அத வீட்டுக்கு எடுத்து வரார். 

வீட்டுல இருந்த பெட்டை கோழி அடை காத்துட்டு இருந்தது....அந்த கோழி முட்டைகளோட கழுகு முட்டையை சேர்த்து வைக்கிறார். 

கொஞ்ச நாள் கழிச்சி கோழி குஞ்சுகள் வர ஆரம்பிச்சுது. அது கூட சேர்ந்து கழுகு குஞ்சும் வந்துது. 

இது எல்லாம் ஒன்னு சேர்ந்து அம்மா கோழி கூட சந்தோஷமா வளர ஆரம்பிச்சாங்க. ஒரு நாள் கோழி குஞ்சு வானத்துல உயரத்துல ஒரு கழுகு பறக்கிறது பாத்துட்டு இருந்துது. அங்க வந்த கழுகு குஞ்சு என்ன பாக்குறேனு கேட்க....அங்க பாரு மேகத்துக்கு மேல.....ஒரு பறவை எவ்ளோ உயரத்துல பறக்குது. ஆனா நம்மால அப்படி பறக்க முடியாது.நமக்கும் அந்த சக்தி இருந்தா எவ்வளவ் சந்தோஷமா இருக்கும்னு சொல்லுது. இத கேட்ட கழுகு குஞ்சு ஆமாம் நமக்கு அந்த சக்தி இல்ல நாமளும் மேகத்துக்கு மேல பரந்தா எல்லாத்தையும் பாத்து ரசிச்சிருக்கலாம் என்ன பண்ண கடவுள் நம்மள இப்படி படைச்சிட்டார்னு வருத்த பட்டுச்சு. 

கழுகு குஞ்சு கோழி குஞ்சு கூட்டத்துல வளர்ந்ததனால தன்னோட சக்தி என்னனே தெரியாம இருக்கு. இப்படி தான் நாம யாரோட பழகுறோம்,,,,யார் கூட இருக்கனும் இது தான் நம்ம வாழ்க்கையை தீர்மானிக்கும்.

 தவளைகள் கூட்டம்

தவளைகள் குழு ஒன்று காடு வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, ​​அவற்றில் இரண்டு தவளைகள் ஆழமான குழிக்குள் விழுந்தன. மற்ற தவளைகள் குழியைச் சுற்றிக் குவிந்து, அதன் ஆழத்தைப் பார்த்தபோது, ​​​​அவை இரண்டு தவளைகளுக்கும் நம்பிக்கை இல்லை என்று சொன்னன. இருப்பினும், இரண்டு தவளைகளும் மற்றவர்கள் சொல்வதை புறக்கணிக்க முடிவு செய்தன, அவை குழியிலிருந்து குதிக்க முயற்சித்தன. எவ்வளவு முயற்சி செய்தாலும், குழியின் உச்சியில் இருந்த தவளைகளின் கூட்டம் இன்னும் விட்டுவிட வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தது. அவர்கள் அதை ஒருபோதும் செய்ய மாட்டார்கள் என்று. இறுதியில், தவளைகளில் ஒன்று மற்றவர்கள் சொல்வதைக் கவனித்து, அதைக் கைவிட்டு, கீழே விழுந்து இறந்தது. மற்ற தவளை தன்னால் முடிந்தவரை தொடர்ந்து குதித்தது. மீண்டும், தவளைகளின் கூட்டம் வலியை நிறுத்தவும், இறக்கவும் அவரைக் கத்தியது. அவர் இன்னும் கடினமாக குதித்து இறுதியாக வெளியேறினார். அவன் வெளியே வந்ததும், மற்ற தவளைகள், “நாம் கேட்கவில்லையா?” என்றன. அவர் காது கேளாதவர் என்று தவளை அவர்களுக்கு விளக்கியது. அவர்கள் தன்னை முழு நேரமும் ஊக்குவிப்பதாக அவர் நினைத்தார். கதையின் கருத்து: மனிதர்களின் வார்த்தைகள் மற்றவர்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் சொல்வதை உங்கள் வாயிலிருந்து வெளிவருவதற்கு முன் யோசியுங்கள். இது வாழ்க்கைக்கும் இறப்புக்கும் உள்ள வித்தியாசமாக இருக்கலாம்.

"நாம் எவ்வழியோ மக்களும் அவ்வழி


அது ஓர் அழகிய நகரம். அந்த நகரத்தின்  நுழைவு வாயிலில் எப்போதும் ஒரு வயதான பெரியவர்  அந்நியர்கள் யாரும் உள்ளே சென்று விடாமல் காவல் காத்துக்கொண்டிருப்பார். ஒரு நாள் வாலிபன் ஒருவன் நகரத்தின் வாயிலை நோக்கி குதிரையில் வந்துகொண்டிருந்தான். 

அப்போது அங்கிருந்த வயதான காவலாளியிடம் "ஐயா பெரியவரே, இந்த ஊர் மக்கள் எப்படி?"என்று கேட்டான்.

அதற்குக் காவலாளி "ஏன் கேக்குற தம்பி ? இந்த ஊருக்கு குடிவரப் போறியா?" என்று சந்தேகத்துடன் கேட்டார்.

"ஆமாம் பெரியவரே. நான் முன்னாடி இருந்த ஊர் ரொம்ப மோசம். எதுக்கெடுத்தாலும் சண்டைக்கு வருவாங்க. ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் தப்பா பேசிக்கிட்டும் திட்டிக்கிட்டும் , எப்படா அந்த ஊரை விட்டு வருவோம்னு இருந்தது. அதான் கேட்டேன் இந்த ஊர் எப்படி?" என்று கேட்டான்.

''நீ வேற தம்பி, இந்த ஊர் உன்னுடைய ஊரைவிட ரொம்ப  மோசம். போட்டி, பொறாமை, ஜாதிச் சண்டை, கலவரம்ன்னு ஏதாவது ஒரு பிரச்னை இருந்துக்கிட்டே இருக்கும். நீயே நிம்மதியைத் தேடி வர, உனக்கு இந்த ஊரு சரிப்படாது தம்பி " என்று கூறி அந்த வாலிபனை  வெளியே வழியனுப்பி வைத்தார்
சிறிது நேரம் கழித்து,

அவ்வழியாக  வந்த வேறொரு ஆள் காவலாளியிடம் அதே கேள்வியைக் கேட்டான்.

"ஐயா, இந்த ஊரில் தங்கி வியாபாரம் பண்ணலாம்ன்னு இருக்கேன். இந்த ஊர் மக்கள் எப்படி?"
பெரியவர் சிரித்துக்கொண்டே , "ஏன் தம்பி, உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சா ?"என்று கேட்டார்.

"ரெண்டு குழந்தையே இருக்குதுங்க ஐயா" என்றான்.

"அப்புறம் ஏன்? இந்த ஊருக்கு வர்ற? உங்க ஊர்லயே வியாபாரம் பண்ணலாம்ல? " என்றார் காவலர்.

"எங்க ஊர் மாதிரி வராதுங்க.. அந்த ஊர் மக்கள் ரொம்பப் பாசக்காரங்க. என் குடும்பம் இப்போ வறுமையில இருக்கு. சம்பாதிக்கத்தான் இந்த ஊருக்கு வந்தேன். நல்லா  சம்பாதிச்சிட்டு மறுபடியும் அங்கேயே போயிடுவேன்" என்று கண் கலங்கியபடியே கூறினான்.

"அழாதே தம்பி, இந்த ஊர் மக்களும் ரொம்ப நல்லவங்க. தைரியமா நீ வியாபாரம் பண்ணலாம்" என்று கூறி கதவுகளைத் திறந்து உள்ளே அனுப்பி வைத்தார்.

காவலாளியின் அருகில் இருந்த ஒருவர் இந்த இரண்டு சம்பவங்களையும் கவனித்துக்கொண்டிருந்தார்.

உடனே அவரிடம் "முதலில் வந்தவர்கிட்ட இந்த ஊர் பொல்லாததுன்னு சொன்னீங்க, இவர்கிட்ட மட்டும் நல்ல ஊர்ன்னு சொல்லுறீங்களே ஏன்?" என்று சந்தேகத்துடன் கேட்டார்.

அதற்குப் பெரியவர்  "இந்த உலகம்  மாதிரி. நாம எப்பிடி இருக்கிறோமோ அப்படித்தான் கண்ணாடி நம்மைக் காட்டும்'' என்றார்.


அனைத்தையும் சுமக்காதே !


ஜென் துறவிகள் இருவர் தொடர்ந்து பெய்த மழையினால்  ஒரு குடிசையின் கீழ் வெகுநேரமாக நின்று கொண்டிருந்தனர். மழை நின்றதும் தங்களது இருப்பிடத்தை நோக்கி நகர்ந்து செல்லும்போது, வழியில் ஓர் அழகான இளம் பெண் சாலையைக் கடக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள்.

இதைக்கண்ட துறவிகளில் ஒருவர், "என்னாயிற்று பெண்ணே? ஏதேனும் உதவி தேவையா?"என்று கேட்டார்.

பதிலுக்கு அந்தப் பெண், "நான் என் தோழியின் திருமணத்துக்குச் செல்ல உள்ளேன். ஆனால், இந்தச் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது. நடந்து சென்றால் நிச்சயம் என் அழகிய பட்டுப் பாவாடை பாழாகிவிடும்" என்று கூறி வருந்தினாள்.

"கவலைப்படாதே, என் தோள்களின் மீது ஏறிக்கொள். நீ சேர வேண்டிய இடத்தில் உன்னைச் சேர்த்துவிடுகின்றேன்" என்று கூறிவிட்டு அவளுக்கு உதவி புரிந்தார்.

திரும்பி வரும் வழியில் தன்னுடன் இருக்கும் மற்றொரு துறவி கோபமாக இருப்பது போல அவருக்குத் தோன்றியது. ''ஏன் என் மீது கோபமாக உள்ளீர்கள்?'' என்று கேட்க, அதற்கு அவர் ''நாம் ஒரு துறவி  என்பதை மறந்துவிட்டு அந்தப் பெண்ணை எப்படித் தொட்டுத் தூக்கலாம்? இது தவறானது என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?" என்று கேட்டார்.

உதவி செய்த துறவி, "தூக்கிய அந்தப் பெண்ணை அப்போதே நான் இறக்கிவிட்டேன், நீங்கள்தான் அந்தச் சம்பவத்தை இறக்காமல் மனதில் சுமந்துகொண்டு இருக்கிறீர்கள்"என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

நாமும் நமது வாழ்வில் பிறர் ஏற்படுத்திய காயங்களை மனதில் தூக்கிக்கொண்டு செல்கின்றோம். எது முக்கியம் எது தேவையற்றது என்பதைப் பகுத்துப் பார்க்கத் தெரிந்துவிட்டால் , வாழ்வு என்றென்றும் ஆனந்தமே.

No comments:

Post a Comment