சின்ன திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி....


20 பேர் கொண்ட குழுவினரோடு சின்ன திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்த நிலையில் மே 31 முதல் 60 பேருடன் படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ளலாம் என FEFSI நிறுவனத்திற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமும் மற்றும் தென்னிந்திய சின்ன திரை தயாரிப்பாளர் சங்கமும் மாண்பு மிகு செய்தி துறை அமைச்சரை நேரில் சந்தித்து அனுமதி கோரியதின் பேரில் இது அறிவிக்க பட்டுள்ளது.



இதன்படி 60 நடிகர் நடிகைகள், தொழில் நுட்ப பணியாளர்கள் வைத்து பட பிடிப்பு நடத்தி கொள்ளலாம். சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையிறடமும் பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்த சம்பந்த பட்ட மாவட்ட ஆட்சி தலைவரிடமும் அனுமதி பெற வேண்டும். படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் அனைவரும் மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது விதிக்கும் அணைத்து கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்றவேண்டும். தயாரிப்பாளர்கள் இதனை உறுதி செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment