அடங்குமா கொரோனா?... அடக்குமா அரசு?

                        ஐந்தாம் கட்ட ஊரடங்கு, மண்டலம் வாரியாக தளர்வுகள். கொரோனாவோ உச்ச கட்டத்தை நோக்கி. இப்படி சாமானியர்களை அரசும், கொரோனாவும் கலங்கடித்து கொண்டிருக்கிறது. சென்னையில் கொரானாவின் கோர தாண்டவம் அதிகரித்து கொண்டிருக்க மருத்துவர்களோ கடுமையான ஊரடங்கு சென்னைக்கு மட்டும் தேவை என எச்சரிக்க, அரசோ எதையும் காதில் வாங்கி கொள்ளாமல் சென்னைக்கு தளர்வுகளை அறிவித்து இருப்பது கவலை அளிக்க கூடியதாக இருக்கின்றது.



                    அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவுவது, சமூக இடைவெளி கடை பிடிப்பது என்று மக்களுக்கு கட்டளை போடுகிறது அரசு. இத கடை பிடிப்பார்களா அணைத்து மக்களும். கையில் காசு இல்லை, காசுக்கு வேலை இல்ல, இதில் கொரோனாவை பத்தி எங்கே யோசிப்பது என்று மனம் குமுறுகின்றனர் மக்கள். செய்தி நிறுவனங்களோ  அரசியல் வாதிகள் பின்னே ஓடி கொண்டிருக்க ஏழைகள் கொரோனா பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். ஏழைகளுக்கு கொரோனா வராது என்றார் அன்று முதல்வர், இன்று ஏழைகளுக்கு மட்டுமே கொரோனா வந்து கொண்டிருக்கின்றது.



                    பொருளாதாரத்தை நிலை நிறுத்தவே தளர்வுகள் என்கிறது அரசு, உழைப்பாளிகள் இல்லாமல் போனால் முதலாளிகளால் மட்டுமே நின்று விடுமா பொருளாதாரம்.  இறப்பு விகிதத்தில் வல்லரசு நாடுகளை விட மிக குறைவு என ஆறுதல் சொல்லுகிறது அரசு, ஒவ்வொரு மனிதனின் உயிரையும் காப்பாத்தவே மருத்துவர்களும், மருத்துவ மனைகளும், அரசுகளும் இருக்கின்றன.. இறப்பவர்கள் எல்லாம் சதவிகிதத்தில் குறைவு என்று கூறினால் அவர்களை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களின் சதவிகிதத்தை கணக்கில் எடுக்குமா அரசு. இதற்கெல்லாம் தீர்வு தான் என்ன?
         

        
                    அரசு கையில் இருக்கும் ஒரே ஆயுதம் சட்டம். சென்னைக்கு மட்டும் 2 வாரங்கள் கடுமையான ஊரடங்கு. அதிகப்படியான டெஸ்ட். இது மட்டுமே சென்னையை இந்த கோறப்பிடியில் இருந்து காக்க முடியும்.

No comments:

Post a Comment