Friends of Police... யார் இவர்கள்?





கடந்த 2 வாரங்களாக நாம் தொடர்ந்து கேட்டு கொண்டிருக்கும் வார்த்தைகளில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒன்று. சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக பல தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழு இயங்கி கொண்டிருக்கும். அரசு ஊழியர்களான காவலர்கள் பற்றாக்குறை நேரங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் சமூகத்தில் காவளர்களோடு இணைத்து பனி புரிய உருவாக்க பட்டது. அதே நேரத்தில் காவலர்கள் அடிக்கடி பனி இடமாற்றம் ஆகி கொண்டு இருப்பதால் சொந்த ஊர்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆகவே ஒரு பகுதிக்கு புதிதாக வரும் காவலர்களுக்கு அந்த பகுதியில் இருக்கும் சமூக விரோதிகளை அடையாளம் காட்டும் முக்கிய வேலை இவர்களோடது. இரவு நேர ரோந்து பணிகளில் காவல்களோடு இணைந்தும் பணியாற்றுவார்கள். ஆனால் சமீப காலமாக இந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் காவலர்களை மிஞ்சும் அளவுக்கு பலம் படைத்தவர்களாக மாறி வருகின்றனர். காரணம் லோக்கல் அரசியல் வாதிகளும், தாதாக்களும் இவர்களை அடையாளம் வைத்து உள்ளதால் இவர்கள் அவர்களுக்கு காவல் துறைக்கும் இடையில் தரகர்களாக மாறிவிட்டனர். இரவு நேரங்களில் காவல் நிலையத்தில் இருக்கும் கைதிகளை லத்தி எடுத்து அடிக்கும் அளவுக்கு இவர்களுக்கு அதிகாரம் வழங்க பட்டுள்ளது. சொந்த ஊரில் இருக்கும் இவர்களுக்கு அங்கே சாதி அடிப்படையிலும், மதம் அடிப்படையிலும் வேண்டாதவர்கள் இருப்பார்கள் அவர்களை போலீஸ் துணை கொண்டு பழி வாங்கும் வேலைகளிலும் இவர்கள் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்படுகின்றனர்.

காவல்துறை, பயிற்சி பெற்ற காவல்களை உருவாக்கி பணியில் அமர்த்துகின்றனர். அனால் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற பெயரில் எந்த பயிற்சியும் இல்லாமல் சில காவலர்களோடு கைகோர்த்துக்கொண்டு பொது மக்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். இவர்கள் மீது தொடர்ந்து எழுந்த புகார்களின் அடிப்படையில் திருச்சி சரக டிஐஜி  ஆனி விஜயா அவர்கள் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் தடை விதித்து ஆணை பிறப்பித்துள்ளார்.

எது எப்படியோ ஒரு நல்ல காவலர்களும், நல்ல பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் உறுப்பினர்களும் இணைந்து மக்களுக்கு பாதுகாப்பாகவும், நல்ல நண்பர்களாகவும்,  உறுதுணையாகவும் இருக்க வேண்டுமே தவிர உபத்திரமாக இருக்க  கூடாது என்பதே அனைவறது வேண்டுகோள்.


No comments:

Post a Comment