சன் டிவி நிலா சீரியலில் அதிரடி மாற்றம்



சன் தொலைக்காட்சியில் தினமும் பகல் 12.30கு ஒளிபரப்பாகி வந்த நிலா சீரியல் கோவிட காரணமாக கடந்த 3 மாதங்களாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்க பட்டிருந்தது. ஜூலை 8 முதல் படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் சில மாற்றங்களை அதன் நடிகர் நடிகைகளில் செய்து உள்ளது அதன் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீகாந்த் எண்டெர்டைன்மெண்ட். இதில் மிகவும் பிரபலமாக பாராட்டப்பட்டு வந்த கதாபாத்திரம் நீலாம்பரி, இதில் கன்னட நடிகையான ஷர்மிதா கவுடா நடித்து வந்தார். அவர் பெங்களூரு சேர்ந்தவர் என்பதால் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதால் நீலாம்பரி கதாபாத்திறத்துக்கு வந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் விஜய் டிவி "கல்யாணம் முதல் காதல் வரை" சீரியலில் பிரபலமானவர். இதுமட்டும் இல்லாமல் இன்னும் சில கதாபாத்திரங்கள் மாற்றப்படலாம் எனவும், தொடரின் நேரத்திலும் மாற்றம் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment