கடந்த ஆண்டு 2020 அ தி மு க ஆட்சியில் கொரோனா முதல் அலை. உலகத்தையே திக்கு முக்காடி செய்து கொண்டிருந்தது. உலக நாடுகள் அனைத்தும் செய்வது அறியாது திணறிக்கொண்டிருந்த நேரம். இந்தியாவிலும் கோவிட பரவ ஆரம்பித்தது....நேரம் கடந்து இதன் ஆபத்தை உணர்ந்த இந்திய அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தொடங்கியது. மாநில அரசுகளுக்கு சில திட்டங்களை வகுத்து கொடுத்தது. இதன் படி அனைத்து மாநிலங்களும் தன் மாநில மக்களை காப்பாத்த அனைத்து முயற்சிகளும் எடுத்தன. இந்திய அரசங்கத்தால் அறிவிக்கப்பட்டு மாநில அரசுகள் நாடு தழுவிய முழு ஊரடங்கை கையில் எடுத்தன. ஆரம்பத்தில் மக்கள் ஊரடங்கை மதிக்காமல் இருந்தாலும் அரசு இரும்பு கரம் கொண்டு ஊரடங்கை பின்பற்ற செய்தது. உகலகமே இந்தியாவில் பெரும் பாதிப்பை கொரோனா உருவாக்கும் என்று உற்றுநோக்கிய தருணத்தில் இந்தியாஅதில் இருந்து மீண்டு வந்தது.
2020 ஊரடங்கு
2020 ல் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்தது அ தி மு க அரசு, அன்று முதல்வராக இருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாடற்ற முழு ஊரடங்கை அமுல்படுத்தினார். காவல் துறையினரும் மக்களிடம் கடுமையாக இருந்து ஊரடங்கை வெற்றிகரமாக அமுல்படுத்தினர். அதற்கான பலனும் கிடைத்தது....தமிழகம் கொரோனா குறைந்த மாநிலமாக முன்னோடியாக இருந்தது.

சுகாதார துறையும், மாநகராட்சி மற்றும் ஊராட்சியும் இணைந்து பல வழிகளில் கொரோனாவை விரட்டினர். தெருக்களில் கிருமி நாசினி தெளித்தல், கொரோனா பாதித்த தெருக்களை உடனடியாக தனிமை படுத்த பட்ட பகுதியாக அறிவித்து தொற்று பரவாமல் தடுத்து அங்கே வசித்து வரும் அணைத்து மக்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தி நோய் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்தனர்.
2020ல் இருந்த கொரோனா தொற்று பரவும் விகிதமும், தொற்றின் தாக்கமும் மிகவும் குறைவு என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே நோய் பரவாமல் தடுத்தது.
2021 ஊரடங்கு
முதலாவது அலையில் உலக நாடுகளுக்கு தன் பலத்தை நிரூபித்த இந்திய அரசு இரண்டாவது அலையில் ஆட்சி போதை, சுயநலம், அகந்தையால் மக்களை பலி கொடுக்க ஆரம்பித்தது. முதல் அலையை விட இரன்டாவது அலையில் கொரோனாவின் வீரியம் அதிகமாக இருக்கிறது. நோய் தாக்கம் வேகமாக பரவி கொண்டு வருகிறது. அரசியல் ஆதாயத்துக்காக மக்களை கூட்டம் கூட்டமாக பயன் படுத்தினர் அரசியல் தலைவர்கள். மதம் சார்ந்த நிகழ்வுகளும் மக்களை பலி கொடுக்க லட்ச கணக்கில் பக்தர்களை ஒரே இடத்தில குவிய செய்தனர்.
அன்று எச்சரித்த உலக நாடுகள் இன்று ஏளனம் செய்ய தொடங்கின. இந்தியாவின் மருத்துவ கட்டமைப்புகள், மக்களின் வாழ்க்கை முறை, பொருளாதாரம் இவைகளை உலக நாடுகள் தெரிந்து தான் தொற்று பரவினால் இந்தியா ஆபத்தில் சிக்கி விடும் என எச்சரித்தனர். இதை நன்கு அறிந்த இந்திய அரசாங்கமோ, அதை பொருட்படுத்தாமல் தங்களின் சுய நலத்துக்காக அப்பாவி மக்களை பனைய வைத்தனர். இன்று கொத்து கொத்தாக மக்கள் அணைத்து மாநிலங்களிலும் மடிகின்றனர். மருத்துவ மனைகளில் போதிய படுக்கைகள் இல்லை, ஆக்ஸிஜன் தேவை அதிகமான நிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை.
இந்த போராட்டத்தின் இடையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம். தி மு க ஆட்சிப்பொறுப்பில் அமர்கிறது. ஸ்டாலின் முதல்வராகிறார். முதல் பணியே கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும், வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தில் தமிழகத்தை காத்திட வேண்டும். புதிதாக இம்முறை உருவெடுத்துள்ள ஆக்ஸிஜன் பற்றாக்குறை முதல்வர் முன் இருக்கும் மிக பெரிய சவால்.
இந்த ஊரடங்கு போதுமானதா....?

முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதும் முதல் கட்டமாக மக்களின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை கொண்டு வந்தார். மக்கள் பொது இடங்களில் மாஸ்க் போடுவதும், கூட்டம் கூடாமல் இருப்பது மட்டுமே கொரோனாவிலிருந்து நம்மை காத்துக்கொள்ளும் ஒரே வழி. ஆனால் இவை இரண்டையுமே மக்கள் பின் பற்றவில்லை. விளைவு நாளுக்கு நாள் தொற்று அதிகரிக்க ஆரம்பித்தது. மருத்துவர்கள் மற்றும் அணைத்து கட்சி தலைவர்கள் பரிந்துரை பெயரில் 2வது கட்டமாக மிக சில தளர்வுகளோடு முழு ஊரடங்கை கொண்டு வந்துள்ளனர்.
அடங்குவார்களா மக்கள்....அடங்குமா கொரோனா...?
அரசு இன்னும் கடுமையான நெறிமுறைகளை கையில் எடுக்க வேண்டும், எந்த வித தளர்வுகள் இன்றி ஊரடங்கை அறிவிக்க வேண்டும். மீறுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடுமென எச்சரிக்க வேண்டும். சென்ற ஆண்டு போன்று இந்த ஆண்டும் அணைத்து தெருக்களிலும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். அதிக தொற்று உள்ள இடங்களை தனிமை படுத்தி அங்கு வசிக்கும் அனைவர்க்கும் பரிசோதனை நடத்த வேண்டும். அனைவரையும் தடுப்பூசி வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும். தடுப்பூசி போட்டவர்கள் சான்றிதழ் நகல் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். காவல் துறையினர் அவர்களுக்கு மட்டும் அத்தியாவிச நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கப்படுமென அறிவிக்க வேண்டும்.


Hope, everything goes well
ReplyDelete