கொரோனா நோயாளிகளுக்கு வீடு தேடி வரும் இலவச உணவு.

ஆரண்ய அறக்கட்டளை தன்னார்வ தொண்டு நிறுவனம் தான் இப்படி ஒரு அறிவிப்பை சென்னையில் வீட்டில் தனிமை படுத்தி கொண்டிருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு அறிவித்துள்ளது.

2015 ம் ஆண்டு, தற்போதைய போலீஸ் கூடுதல் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோரின் மனைவியால் ஆரம்பிக்க பட்டது தான் இந்த ஆரண்ய அறக்கட்டளை. இந்த அறக்கட்டளை அரசு மருத்துவ மனைகளுக்கு வரும் புற நோயாளிகளுக்கு இலவச உணவு வழங்கி வந்தனர். தற்போது இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவி வந்துகொண்டிருக்க தமிழ்நாட்டிலும் நாள் ஒன்றுக்கு சுமார் 29000 துக்கும் மேல் மக்கள் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதில் சென்னையில் மட்டும் சுமார் 7000 தாண்டி மக்கள் தினமும் பாதிக்க பட்டு வருகின்றனர்.

மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரிக்க, அரசாங்கம் நோய் தொற்று  குறைவாக உள்ளவர்கள் வீட்டில் இருந்த படியே மருத்துவரின் ஆலோசானைப்படி தனிமை படுத்திக்கொள்ளலாம் என அறிவித்துள்ளனர். இதன்படி வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு உதவ ஆரண்யா அறக்கட்டளை தொலைபேசியில் தொடர்பு கொள்வோருக்கு இலவசமாக வீடு தேடி உணவு வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்துள்ளனர்.

முதல்கட்டமாக கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் மற்றும் அடையார் பகுதிகளுக்கு மட்டும் இந்த திட்டம் செயல் படுத்த படும். இந்த 5 பகுதிகளில் வீட்டில் கொரோனா தொற்றால் தனிமை படுத்தி கொண்டுள்ளவர்கள் 044-42997501 தோலை பேசிக்கு தொடர்பு கொண்டு காலை 10 மணி முதல் 5 மணி வரை ஆர்டர் செய்யலாம்.

இது போன்ற மனித நேயம் மிக்க இன்னும் பலர் இந்த பேரிடர் காலத்தில் ஏழை எளிய மக்களின் துயர் துடைக்க தன்னால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர்.

1 comment: