தமிழக முதல்வர் இவ்வளவு சவாலை சமாளிக்கனுமா?


பத்து ஆண்டுகளாக எதிர்க்கட்சியில் அமர்ந்து பல அவமானங்களை தாங்கி பொறுமையோடு மக்களின் இந்த தீர்ப்புக்காக காத்திருந்து இன்று முதல்வர் என்ற சிம்மாசனத்தில் அமர போகிறார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்.

 


 மத்தியில் அமர்ந்திருக்கும் மத்திய அரசு மாநிலங்களை தன் அதிகாரத்துக்குள் கொண்டு வர முயற்சித்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் தமிழர்களின் உரிமைகள் பறிக்க படுகின்றன என ஏற்கனவே பல கட்சிகள், ஏன் எதிர் கட்சி வரிசையில் அமர்ந்திருந்த தி.மு.க கூட இதை உரக்க சொல்லி வந்தது. இன்று தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்கும் ஸ்டாலின் என்ன செய்ய போகிறார் என்று அணைத்து கட்சிகளும், தமிழக மக்களும் உற்று நோக்குவார்கள். மத்திய அரசோடு சுமூக நிலையை கடை பிடிப்பாரா இல்ல மோதல் அரசியல் செய்ய போகிறாரா முதல்வர் ஸ்டாலின்.

மிக பெரிய சவாலாக அவர் முன்னே நின்று கொண்டிருப்பது கோவிட் இரண்டாவது அலை. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கோவிட் தாக்கம் சற்று குறைவாக இருந்தாலும் மருத்துவர்களின் கணிப்புப்படி இன்னும் சில வாரங்களில் தமிழகம் மிக பெரிய பாதிப்பை அடையும். இதையும் சமாளித்தாக வேண்டும். பொருளாதாரத்தையும் சரி செய்ய வேண்டும். இப்படி கடும் சுமைகளோடு அரியணையில் ஏறுகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

2021 மக்களின் மனதை வென்று தேர்தலில் வெற்றி பெற்றது போல் ஊழலற்ற ஆட்சியையும், தமிழர்களின் சுய மரியாதையை வென்று சிறந்த தமிழகத்தை படைப்பாரென்று நம்பிக்கையோடு இருப்போம்.

No comments:

Post a Comment