1,10,19,28 ஆம் தேதிகளில் பிறந்தோரின் பிரத்யேக குணங்கள்
1- ஆம் தேதி பிறந்தவர்களின் குணங்கள்
இந்த தேதியில் பிறப்போருக்கு பிறர் கூறும் அறிவுரைகளையோ அபிப்ராயங்களையோ கேட்பதில் துளி கூட பொறுமை கிடையாது. கவற்சியாகவோ நயமாகவோ பேச தெரியாது. மனதில் உள்ளதை அப்படியே ஒளிவு மறைவு இல்லாமல் கூறிவிடுவார்கள். உரத்த குரலில் மற்றவர் சொல்வதை கேட்காமல் மறுத்து விடுவார்கள். அவ்வளவாக மற்றவரை அனுசரித்து போக தெரியாது. அதிக அளவில் தன்னம்பிக்கை கொண்டவராக இருப்பார்கள். வாழ்க்கையில் முன்னேறுவதில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவார்கள்.
10- ஆம் தேதி பிறந்தவர்களின் குணங்கள்
இந்த தேதியில் பிறப்பவர்கள் மிகவும் பொறுமையும் நிதானமும் கொண்டவர்கள். பிற மனிதர்களிடம் மிகவும் அன்பாகவும், நல்ல நேசத்துடனும் காணப்படுவார்கள். மனதில் ஒன்று வைத்து வெளியில் வேறு பேச தெரியாதவர்கள்.மிக பிரபலமான நிலையை அடைவார்கள். சகா மனிதர்களிடம் மிக இனிமையாக பழகுவார்கள்.
19- ஆம் தேதி பிறந்தவர்களின் குணங்கள்
இந்த தேதியில் பிறப்பவர்கள் மிக அதிகமான மனோ சக்தி உடையவர்கள். நல்லவர்களிடம் நல்லவர்களாகவும் தீயவர்களிடம் தீயவர்களாகவும் இருப்பார்கள். அதிக புத்தி கூர்மை உடையவர்கள். தான் எப்போதும் தன் நிலையை மாற்றிக்கொள்ளமாட்டார்கள். ஒரு முறை முடிவு எடுத்தால் அதில் உறுதியாக இருப்பார்கள்.
28- ஆம் தேதி பிறந்தவர்களின் குணங்கள்
இந்த தேதியில் பிறப்பவர்கள் பார்ப்பதற்கு மிக அழகான தோற்றம் உடையவராக இருப்பார்கள். ஆண்களாக இருந்தாலும் கொஞ்சம் நளினம் உடையவராக இருப்பார்கள். இவர்களின் கண் பார்வை நன்றாக இருக்கும். பிறரை எளிதாக நம்பி விடுவார்கள். பல சமயங்களில் ஏமாறுவதும் உண்டு. மிக புத்திசாலியாக பேசுவார்கள், அப்படியே நடப்பதாக நினைத்து சில இடங்களில் தோற்றுவிடுவார்கள். ஓவர் காண்பிடென்ட் என்று ஆங்கிலத்தில் சொல்வாரகள்.
2, 11, 20, 29 இந்த தேதிகளில் பிறந்த நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்படி இருப்பீர்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் 2 ஆக இருந்தால் உங்களுக்கு உரிய கிரகம் சந்திரன். உங்களின் குணம், தொழில், நண்பர்கள், உடலமைப்பு, இல்லற வாழ்க்கை இவைகளெல்லாம் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் காண்போம்.
குணம்
இரண்டாம் எண்ணில் பிறந்த நீங்கள் சந்திரனை கிரகணமாக கொண்டுள்ளதால் உங்களின் செயல்திறன் ஏற்ற இறக்கத்தோடு தான் காணப்படும். சந்திரனின் வளர்பிறை, தேய்பிறை போல உங்களின் வாழ்க்கையும் ஏற்றத்தாழ்வுகளுடன் அமையும். ஆனால் நீங்கள் சுறுசுறுப்பில் குறைந்தவர்கள் அல்ல. எதையும் சிந்தித்து செயல்படுவீர்கள். உங்களுக்கு வாழ்வில் எதிர்ப்புகள் இருந்தாலும் அதனை எதிர்த்து முன்னேறி செல்வீர்கள். ஞாபகசக்தி உடையவர்களாக இருப்பீர்கள். கற்பனை சக்தி அதிகமாக இருக்கும். நகைச்சுவை பேச்சாளராக இருப்பீர்கள். கடவுள் பக்தி நிறைந்தவர்களாகவும் இருப்பீர்கள். கடந்த காலங்களை நினைவு படுத்தி கொண்டு உங்களுக்கு நீங்களே கவலைப்பட்டுக் கொள்வீர்கள். உங்களின் எண்ணங்களை நேரடியாக மற்றவர்களிடம் கூற மாட்டீர்கள். இலைமறைக் காயாக உங்களின் பேச்சு இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் தோல்வியில் போய் முடிந்தால் அதனை மீண்டும் முயற்சித்து வெற்றி பெறுவீர். உங்களிடம் வாக்கு கொடுத்துவிட்டு அதை மறந்தவர்கள் உங்களிடமிருந்து தப்பிக்க முடியாது. உங்களின் மன தைரியம் சிலசமயம் மேலோங்கும், சில சமயங்களில் கோழைத்தனமும் காணப்படும்.
தொழில்
கற்பனைத் திறன் கொண்ட நீங்கள் கதை எழுதுபவர்களாகவும், ஓவியம் வரைய கூடியவர்களாகவும், வசனம், பாடல்கள் போன்றவற்றை எழுதுபவர்களாகவும் இருக்கலாம். சந்திரனின் ஆதிக்கம் உள்ளதால் பால் வியாபாரம், குளிர்பான வியாபாரம், ஐஸ்கிரீம் வியாபாரம், நீர் சம்பந்தப்பட்ட பொருட்கள் உங்களுக்கு தொழிலாக அமையும். கடல் கடந்து சென்று வேலை செய்யும் யோகமும் உங்களுக்கு அமையும். அரசாங்க உத்தியோகம் செய்பவர்களாகவும் இருப்பர்.
நண்பர்கள்
எளிதில் குழப்பக் கூடிய நீங்கள் யாரிடமும் அதிகமாக நட்புறவு வைத்துக் கொள்ள மாட்டீர்கள். அப்படி பழகி விட்டால் அவர்களை விட்டு பிரிய மாட்டீர்கள். நண்பர்களிடம் உண்மையாக பழகுவீர்கள். உங்களுக்கு கூட்டு எண் 1, 5ல் பிறந்தவர்கள் நண்பர்களாக இருக்க முடியும். கூட்டு எண்4, 7 தேதி பிறந்தவர்கள் இடம் உங்களால் நட்பு வைத்துக்கொள்ள முடியாது.
உடலமைப்பு
சந்திரனை கிரகணமாக கொண்ட நீங்கள் நிச்சயம் அடுத்தவர்களை கவரக்கூடிய அழகினை உடையவர்களாக தான் இருப்பீர்கள். நல்ல உயரம், கூர்மையான மூக்கு, அழகான முகம் இவைகளை நீங்கள் பெற்றிருப்பீர்கள். உங்கள் குரலானது இனிமையாக இருக்கும். நீங்கள் குளிர் சாதன பொருட்களை மிகவும் விரும்பி அருந்துவதால் உங்களுக்கு சளி, காய்ச்சல், தலைவலி போன்ற பிரச்சினைகள் அடிக்கடி உண்டாகும். கூட்டு எண் இரண்டில் பிறந்தவர்கள் மது அருந்தக் கூடாது அது உங்கள் உயிருக்கே ஆபத்தாக அமையும்.

No comments:
Post a Comment