காத்துவாக்குல ரெண்டு காதல் - படத்தை காண வந்த இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா, விஜய்சேதுபதி #kaaththu vaakula rendu kaadhal


 விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் கடந்த 28-ம் தேதி வெளியான திரைப்படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து, விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார்.

 

படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படக்குழுவினர் சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவி திரையரங்கத்திற்கு படத்தை காண வந்தனர். இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா, விஜய்சேதுபதி ஆகியோர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

No comments:

Post a Comment