இளைய தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் இப்போதைக்கு திரைக்கு வராது என தகவல் வெளியாகி உள்ளது. இது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 3 மாதங்களாக திரை அரங்குகள் கொரோனா வால் மூடப்பட்டுள்ளது. மீண்டும் திரை அரங்குகளை திறக்க ஆலோசனைகள் நடந்து வரும் நிலையில் மாஸ்டர் தயாரிப்பாளர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
தற்போது திரை அரங்குகள் திறக்க பட்டாலும் மாஸ்டர் திரைப்படம் உடனடியாக திரைக்கு வராது. நிலைமை சீரான பிறகே இது குறித்து ஆலோசித்து முடிவெடுப்போமென தெரிவித்துள்ளார். தனி மனித இடைவெளி, மாஸ்க் போன்ற கட்டுப்பாடுகள் விஜய் ரசிகர்கள் கடை பிடிப்பதில் சிரமும் இருக்குமென்றும், இதனால் திரை அரங்குகளில் கூட்டம் குறையும் என்பதற்காகவே இந்த முடிவு என விமர்சகர்கள் கருதுகின்றனர்.


No comments:
Post a Comment