கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்று வருகிறது. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், த்ரிஷா ஆகியோரின் வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் தொடர்ந்து நடித்து வருகிறார் அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு முதலில் வெளியான கனா மிகப்பெரிய வெற்றி பெற்றது.
தங்கை குணச்சித்திர வேடம் ஹீரோயினாக நடித்து வரும் அதே சமயம் தங்கை குணச்சித்திர வேடம் என எது கிடைத்தாலும் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தெலுங்கு திரைப்படத் துறையிலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது . அந்த வகையில் இப்பொழுது ரிபப்ளிக் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
டக் ஜெகதீஷ் திரைப்படத்தில் 2வது கதாநாயகி நானியின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு பின்னர் நேரடியாக ஓ டி டி யில் வெளியான டக் ஜெகதீஷ் திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து பலரது பாராட்டுகளையும் பெற்றிருந்தார். சாய் தரம் தேஜா நடிப்பில் உருவாகிவரும் ரிபப்ளிக் திரைப்படம் இவருக்கு தெலுங்கில் அடுத்ததாக வெளியாக உள்ளது.
சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அடிக்கடி க்யூட்டான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் இப்பொழுது மங்களகரமான மஞ்ச கலர் சுடிதாரில் பார்க்கவே அம்சமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் பாராட்டுகளையும் லைக்குகளையும் குவித்துவர மஞ்சக் காட்டு மைனா என பலரும் இவரை வர்ணித்து வருகின்றனர்.










No comments:
Post a Comment